மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

🕔 October 11, 2015

Digambaram - 004
– க. கிஷாந்தன் –

யற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் கையளித்தார்.

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதிக்கு ‘நடேச ஐயர் புரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுக்கோள்கிணங்க, இந்த வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் திகாம்பரம் வழங்கிய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதலாவது வேலைத்திட்டமாக இந்த வீடமைப்பு திட்டம் முழுமையாக பூர்த்தியாக்கப்பட்ட நிலையில், இன்று கையளிக்கப்பட்டது.

07 பேர்ச் நிலப்பரப்பில் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக, மக்களிடம் எவ்வித பணமும் அறவிடப்படவில்லை.

இங்குள்ள ஒவ்வொரு வீடும், சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபா செலவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும்,  சமயலறை, விராந்தை, 02 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் ஆகியன அடங்கியுள்ளன. மேலும் குடிநீர் வசதி, மின்சார வசதிகளும் வீடுகளுக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி. புத்திரசிகாமணி  உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.Digambaram - 001Digambaram - 002Digambaram - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்