தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

🕔 June 17, 2019

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பொது ஜன பெரமுன தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்திருந்ததாக, ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத்  தெரிவுக்குழு முன்பாக சாட்சியளித்த முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்