மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல
அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் மத நல்லிணக்கத்துக்கு பலமாகவும் இந்த அழைப்பு அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
புஸ்ஸலாவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
பௌத்த மதம் அழிந்து வருவதாக சமூகத்தில் பொய்யான நிலைப்பாட்டை உருவாக்க சிலர் முயற்ச்சிக்கின்றனர். பல நூற்றாண்டுகள் ஐரோப்பியரின் ஆதிக்கம் நாட்டில் காணப்பட்ட போது அழியாத பௌத்த மதத்தை தற்போது அழிக்க முடியாது.
சிலர் தமது சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.