மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

🕔 June 4, 2019

– அஹமட் –

மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு மாநகர சபையின் மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மலேசியாவுக்கான தூதுவர் உள்ளிட்ட பல பதவிகளை முஸம்மில் வகித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இரட்டை இலைச் சின்னத்தைக் கொண்ட துஆ ஆகிய கட்சிகளிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி நேற்றைய தினம் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்