அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தெரிவிக்குழுவை நியமிக்கத் தீர்மானம்

🕔 May 21, 2019

மைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை  நியமிக்க, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணையின்போது, அவர் குற்றவாளியென நிருபனமானால், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

10 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று, சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்