அமைச்சர் றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிப்பு; பொதுஜன பெரமுன ஆரவளிப்பதில் சிக்கல்

🕔 May 16, 2019

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் 66 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ​ஆதரவளிப்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதில், மஹிந்த ராஜபக்ஷபின் பொதுஜன பெரமுன கட்சிக்குள், எதிர்ப்புகள் உள்ளதாகவும் தெரியவருகிறது.

றிசாட் பதியுதீனுக்கு எதிரான மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், கொண்டுவரத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்