சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் காசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி, பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ‘ட்வீட்’ செய்துள்ளார்.
முக்கிய ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை நடத்திவிரும் சந்திப்பில் ராணுவ உளவுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஒரு மௌலவியாவார்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் அமைப்பை உருவாக்கி, அதற்குத் தலைமை வகித்து வந்த அவர், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாகி இருந்த நிலையிலேயே, மேற்படி தாக்குதலில் ஈடுபட்டு இறந்துள்ளதாக ராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.