பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

🕔 April 17, 2019

ஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

தனியார் பஸ் வண்டியும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வேன் சாரதி வேகக் ட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்