அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி குறித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானம்

🕔 April 4, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி தொடர்பாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முறையிடுவதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முன் வந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த விடயத்தில் தம்மிடமுள்ள ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கோரும் பட்சத்தில், கையளிப்பதற்கு ‘புதிது’ செய்தித்தளம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, லஞ்சம் பெற்றுக் கொண்ட அதிகாரியின் அடையாளத்தை தேவையேற்படும் போது வெளியிடுவதற்கும் ‘புதிது’ செய்தித்தளம் தயாராக உள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மேற்படி அதிகாரி தொடர்பில், மேலும் சில புகார்களும் கிடைத்துள்ளன. அவை குறித்தும் விரைவில் செய்திகளை வெளிடவுள்ளோம்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் ஊடாக அபிவிருத்திப் பணிகளுக்காக அரச நிதியொதுக்கீடுகள் வழங்கப்படும் போது – இவ்வாறான அதிகாரிகள் கொந்தராத்துக் காரர்களிடமிருந்தும், அபிவிருத்தி நடைபெறும் நிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்று வருகின்றனர் என்று, பரவலான குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பாடசாலையொன்றிடம் லஞ்சம் பெற்ற, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி: ‘புதிது’ வசம் ஆதாரம்  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்