மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

🕔 April 3, 2019

லங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஒன்பது பேரையும் மன்றுக்கு அழைக்குமாறு கோரி – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்