ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

🕔 March 25, 2019
ம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, திரயாய ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் 5.5 ஏக்கர் காணிகளுக்கான ஆவணங்கள், இதன்போது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன்போது ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரச உயர் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

Comments