பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

🕔 February 25, 2019

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல, டிபெண்டரின் உரிமையாளர்  மற்றும் டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சரத் சந்திரவின் இடுப்பு எலும்பு முறிந்துள்ளதோடு,  தீவிர தலைக்காயங்கள் மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

தற்போது இவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி, தலைகவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)

Comments