நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்
– அஹமட் –
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்ற, மத்திய கல்லூரியின் விளையாட்டு விழாவில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
இதனையடுத்து அவர் அங்கிருந்த அம்பியுலன்ஸ் மூலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
ஆயினும், தற்போது அவர் குணமடைந்த நிலையில் – வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த வருடம் ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.