தலைப்புச் செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண ஆளுநர்களையும்  இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.

ஆளுநர் பதவிகளில் ஜனாதிபதி மாற்றங்களை மேற்கொள்வதற்காகவே, இவ்வாறு அனைவரையும் பதவி விலகக் கோரியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

எனினும் தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.