அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

🕔 December 8, 2018

ட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட அன்னார், ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பணிப்பாளர் சபைத் தலைவருமாவார்.

இவர் மர்ஹும் சித்திக் ஆலிம் – றுகையா உம்மாவின் மகனும், மர்ஹும் றபியுதீீன் ஆலிமின் மருமகனும், உம்மு அழிமாவின் கணவரும், நிஸ்றினா (ஆசிரியை), நஷீத், நஸீப் , நஸீஹா ஆகியோரின் தந்தையும் அன்சார் (ஆசிரியர்), இர்சானா (ஆசிரியை) ஆகியோரின் மானனாரும் ஆவார்.

அன்னார் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர் எம்.எல். ஆதம் லெப்பை, அலிம் மற்றும் ஐயும் (பொலிஸ் பரிசோதகர்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அஸர் தொழுகையினை அடுத்து, பாலமுனை மஜ்மஉஸ் ஸாலிஹீன் பள்ளிவாசலில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் இடம்பெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்