பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்
பிரதமர் அலுவலகத்துக்கான நிநியை முடக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றபோது, அதற்கு ஆதரவாக 123 வாக்குள் கிடைத்தன.
முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ முன்வைக்கவுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிரான யோசனையொன்றினை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சபையில் முன்வைத்தார்