பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு
புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டதோடு, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வருமாறு அழைத்தனர்.
இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக பிரபாகரனின் வீட்டுக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்றபோது வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவரிடமிருந்து கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் பின்னர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் விடுவிக்கப்பட்டனர்.