வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

🕔 September 16, 2015

Dead body - 011– க. கிஷாந்தன் –

லவாக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணியளவில், அப்பகுதிக்கு தொழிலுக்காகச் செல்லும் போது, மேற்படி சடலத்தைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக தலவாக்கல பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கல பொலிஸார் – சடலத்தை மீட்டுள்ளனர்.

இறந்து காணப்பட்டவர், வட்டகொட மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நாராயணன் ராமையா எனத் தெரியவந்துள்ளது. இவர் விஷம் அருந்தியிருக்கலாமென, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா – மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்