அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள்

🕔 September 16, 2015

MHM. Ashraff - 03
– எஸ்.எம்.எம். றம்ஸான் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம் புதன்கிழமை காலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் ஞாபகார்த்த உரை நிகழ்த்தியதுடன், கல்லூரி மௌலவி ஆசிரியர் எம்.பீ.எம்.நிஸ்தார் விஷேட பிரார்த்தனையை நெறிப்படுத்தினார்.MHM. Ashraff - 04

MHM. Ashraff - 01இதேவேளை, அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மரம் நடுகையும், பிரார்த்தனையும், விஷேட சொற்பொழிவும் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் யு.எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார். கல்முனைக் கடற்கரைப் பள்ளியின் பிரதம இமாம் மௌலவி என்.ஏ.எம். ஜப்ரான் விஷேட பிராத்த்தனையில் ஈடுபட்டார்.MHM. Ashraff - 02

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்