118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு

🕔 November 2, 2018

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆயினும், அந்த சந்திப்பில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று, மஹிந்த தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன, அதுரலியே ரத்னதேரர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என அறியமுடிகிறது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொள்ளவில்ல எனத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்