அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம்

🕔 November 1, 2018

புதிய அரசாங்கத்தில் இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த வகையில் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர், 05 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு;

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

  1. துமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம், நீர் வழங்கள் மற்றும் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
  2. தயாசிறி ஜயசேகர – திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்கள்

  1. பியசேன கமகே – இளைஞர், மகளிர்  மற்றும் சிறுவர் அலுவல்கள் ராஜாங்க அமைச்சர்
  2. லக்ஷ்மன் செனவிரத்ன – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
  3. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்
  1. மொஹான்லால் கிரேரு – கல்வி மற்றும் உயர் கல்வி ராஜாங்க அமைச்சர்
  1. ஸ்ரீயானி விஜேவிக்ரம –  மாகாண  சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்
  1. மனுஷ நாணயக்கார – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர்
  1. இந்திக்க பண்டாரநாயக்க – வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
  1. சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள்  மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்
  1. நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர்
  1. காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்.

தனியாக ஒரு கட்சி ஆட்சியமைக்கும் போது, அதிகபட்சமாக 30 பேரைக் கொண்ட அமைச்சரவை ஒன்றினையே அமைக்க முடியும்.

அந்த வகையில், இதுவரையில் 14 பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக, நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்