கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல்

🕔 October 2, 2018

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.ரி.எம். நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக, அவர் சிறப்பாகப் பணியாற்றி  வந்த  நிலையிலேயே,  இவ்வாறானதொரு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் கையொப்பத்துடன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிஸாமுக்கு, மேற்படி புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெற்றிடமாகிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிக்கு, எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பின்புலத்தின் அடிப்படையிலேயே, மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Comments