ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

🕔 October 1, 2018

– அஹமட் –

லுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் மேற்படி வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

வெளிநாடுகளில் நன்கொடை வசூலித்தாவது, அம்பாறை மாவட்டத்துக்கான ‘தாருஸ்ஸலாம்’ அமைக்கப்படும் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் இதன் போது உறுதியளித்தார்.

எவ்வாறாயினும் தேர்தல் நிறைவடைந்து ஏழு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், மு.கா. தலைவர் வழங்கிய வாக்குறுதி தொடர்பாக, அவர் எவ்வித சொரணையுமற்று இருப்பது, அம்பாறை மாவட்ட மக்களை தொடர்ந்தும் ஏமாளிகளாக்கும் செயற்பாடாகும் என்று, மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

வாக்குறுதி வழங்குவதும், பின்னர் அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு புதிதல்ல எனவும், அந்த முக்கியஸ்தர் மேலும் கூறினார்.

ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி வீடியோ

Comments