வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

🕔 September 7, 2018
– பாறுக் ஷிஹான்-

டக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில், இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள், மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்யையும் இழுத்துச் சென்று எரித்தனர்.

அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் – அஸ்மின் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து , முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை அஸ்மின் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாக, இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.

அய்யூப் அஸ்மினின் உருவ பொம்மை – முன்னரும் ஒருமுறை எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments