முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

🕔 September 3, 2018

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை, விளக்க மறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ, நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தவிர, சதோசநிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் மொஹமட் உள்ளிட்டவர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று தொடக்கம் விசாரணைக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்