எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

🕔 September 3, 2015

Sambanthan - 01புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது.

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின் பெயரை சபாநாயகர் அறிவித்த போதே, சபையில் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று, நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக அறிவிக்கப்பட்டமை தொடர்பில், விமல் வீரவன்ச அதிருப்தியை வெளியிட்டதுடன், நாடாளுமன்றத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும் இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் – நேற்று பொலன்நறுவையில் வைத்து கேட்டிருக்கமுடியுமென தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் விடயம் தொடர்பில், சுதந்திரக் கட்சித்தலைவருக்கே கடிதம் வழங்கப்பட்டதாகவும், சபாநாயகருக்கு – இது தொடர்பில் கடிதங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது  கருத்து தெரிவித்த சபாநாயகர், எதிர்கட்சி தொடர்பில் தனக்கு கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்