கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

🕔 June 19, 2018

பால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, தபால் மா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் முன்பாக, தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக, பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments