பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

🕔 September 1, 2015

Majeed - 01
– எம்.வை.அமீர், எம்.ஐ. சம்சுதீன் –


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கிணங்க, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை விரைவில் பிரகடனப்படுத்த வேண்டுமென, கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.

கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, சபைக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போதே, மேற்கண்ட கோரிக்கையினை பிரதி முதல்வர் முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக கல்முனைக்கு வருகை தந்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சாய்ந்தமருது பிரதேச சபையினைப் பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். இதேபோன்று, மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை, புகையிரதப் பாதை அமைக்கப்படும் என்று, தற்போதைய ஜனாதிபதியவர்களும் ஒரு வாக்குறுதியினை, முன்னர் ஒரு தடவை வழங்கினார்.

அந்தவகையில், மேற்படி இரண்டு வாக்குறுதிகளையும் உரியவர்கள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

நேற்றைய அமர்வின்போது, கல்முனை மாநகரசபையின் நீண்ட கால உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி, அண்மையில் காலமான ஏ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு அனுதாபப் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டது.Majeed - 03Majeed - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்