லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி பொலிஸ் பரிசோதகர்; வீடியோ வெளியானதால் பரபரப்பு

🕔 August 29, 2015

தவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Police - 01

இந்தியா – தமிழ்நாடு நெல்லை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை பொலிஸ் நிலையத்திலேயே இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது.

பொலிஸ் முறைப்பாடு ஒன்றின் நிமித்தம் வந்த பொதுமகனொருவரிடம், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டும் காட்சி – குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, லஞ்சம் தர மறுத்த நபரிடம் – குறித்த உதவி பொலிஸ் பரிசோதகர்,  பொலிஸ் நிலையத்துக்கு வெளியில் வைத்து தகராறில் ஈடுபடும் காட்சிகளும், சம்பந்தப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்போது, இந்த வீடியோவானது – ஊடகங்களிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்