தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு

🕔 August 29, 2015

Lab asst - SEUSL - 01
– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.

ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்கள் – தங்களது கடமைகளை இலகுபடுத்துவதற்காக, பல்கலைக்கழக நிருவாகத்தின் அனுசரணையுடன் பயிற்சிகளை கோருவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இதன்போது புதிய நிருவாகத்தின் தலைவராக, எம்.எஸ். அஹமட், செயலாளராகக சலீம் றமீஸ், பொருளாளராக வை.பி.எம். நபீல், உப தலைவராக எச்.எம். ஹன்சியார், உப செயலாளராக கே. ஹபீல் முஹம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், நிருவாகசபை உறுப்பினர்களாக எம்.வை. அமீர் மற்றும் கே.ஆப்தீன் ஆகியோரும், இணைப்பாளராக ஆர். நௌசாட், ஆலோசகர்களாக ஏ.எஸ். முஹைதீன் மற்றும் எஸ். ரிபாய்டீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்