தலைப்புச் செய்திகள்

கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் ஹரீஸ்

– அகமட் எஸ். முகைடீன் –

ரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் – கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வியாழக்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவவிதாரண உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சராகப் பதவி வகித்த ஹரீசுக்கு, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் மூலம் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.