பால்மா, சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கின்றன

🕔 April 22, 2018

பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

அதன்படி ஒரு கிலோ பால்மாவின்  விலை  75 ரூபா­வாலும்  சமையல் எரிவாயு 12.5கிலோகிராம் எரிவாயுவின் விலை  245 ரூபா­வாலும்  அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

லண்­ட­ன் சென்றுள்ள ஜனா­தி­பதி  மைத்தி­ரி­பால சிறி­சேன  நாடு திரும்பியதும்  இவற்றின் விலை அதிகரிப்புகள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும்.

 உலக சந்­தையில்  பால்மா  மற்றும் சமையல் எரிவாயு  அதி­க­ரித்­துள்ள கார­ணத்தால்,  அவற்றின் விலைகளை உள்நாட்டிலும் அதிகரிக்குமாறு, உரிய பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள்,  வாழ்க்கைச் செலவு  தொடர்­பான  குழு­வி­டமும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார  சபை­யி­டமும்  அனு­மதி  கோரியிருந்தன.

ஒரு­கிலோ  பால்­மாவின் விலையை 100 ரூபா­வாலும்  சமையல் எரிவாயுவின் விலையை 275 ரூபா­வாலும்   அதி­க­ரிக்­கும்­படி  பாவ­னை­யாளர்  அதிகார சபை­யிடம்  கோரிக்கை  விடப்பட்டது.

தற்­போது 12.5 கிலோ எடை­யுள்ள சமையல் எரிவாயு கொழும்பில்  1431 ரூபாவாவுக்கும், ஒரு கிலோ பால்மா 810 ரூபாவுக்கும் விற்பனை  செய்யப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்