யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

🕔 April 21, 2018
– பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும் என அறுவிக்கப்பட்டுள்ளது.

புதிய பேரவையின் முதலாவது கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :

1.  மனோசேகரம்
2. பொறியியலாளர். டி.கே.பி.யூ. குணதிலக
3. டொக்டர் பூ. லக்ஸ்மன்
4. பேராசிரியர் எஸ். சிவசேகரம்
5. பேராசிரியர் எச்.எஸ். ஹிஸ்புல்லா
6. ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம்
7. பேராசிரியர் சிவயோகநாதன்
8. பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட
9. ஜெரோ செல்வநாயகம்
10. எஸ். விஸ்னுகாந்தன்
11. டொக்டர் த. சத்தியமூர்த்தி
12. கலாநிதி ஆறு. திருமுருகன்
13. வி. கனகசபாபதி
14. நா. வேதநாயகன்
15. பி. ஈஸ்வரதாசன்.

Comments