ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானியா பயணம்

🕔 April 15, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நாளை 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றவுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் பொருட்டே, ஜனாதிபதி சிறிசேன அங்கு பயணமாகியுள்ளார்.

‘பொதுவானதோர் எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில் இம்முறை, மேற்படி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்