நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டமையை தான் நிராகரித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அளுத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதே அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, தான் உழைப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.



