எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு

🕔 April 5, 2018

தேசிய அரசாங்கம் தொடரும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார்.

“சில உறுப்பினர்களை நாங்கள் இழந்து விட்டோம். ஆனாலும் எங்களுடன் இருப்பவர்களோடு தேசிய அரசாங்கம் தொடரும்.

தனிப்பட்ட நபரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் எதிர்கொள்ளவில்லை. அரசாங்கத்தையும், மக்களின் வெற்றியையும் பாதுகாப்பதற்காகவே, அதனை எதிர்கொண்டோம்.

எங்களிடமும் குறைகள் உள்ளன. அதனை நான் மறுக்கவில்லை” எனவும்  அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகளும், 2015ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் செயற்பாடுகளும் விரைவில் ஆரம்பிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்