யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன – புனானைப் பகுதியில், கட்டார் நாட்டின் ‘கட்டார் ரெட் கிரசன்ட்’ நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்படி வீட்டுத் திட்டக் கிராமம் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகள், பொதுக் கட்டிடங்கள், பாடசாலை, நீர் தாங்கி, மைதானம் மற்றும் அடிப்படைக் கட்டடங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், சிறப்பதிதியாக ‘கட்டார் ரெட் கிரசன்ட்’ அமைப்பின் சர்வதேச நிவாரண அபிவிருத்தி அமைப்பின் பிரதானி ராஸித் ஸாத் அல் மஹனதி கலந்து சிறப்பித்தார்.

