போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு

🕔 August 21, 2015

North korea - 097டகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் யொங் உண்  உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கொரியா, மேற்படி ஒலிபெருக்கி மூலமான பிரசாரங்களை, மீளவும் அண்மையில் ஆரம்பித்ததாவும், இதன் காரணமாகவே, கடந்த வெள்ளிக்கிழமை, தென்கொரியா மீது வடகொரியா பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

வடகொரியவின் தாக்குதலையடுத்து, தென்கொரியாவும் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியிருந்தது.

இரு நாடுகளுக்குமிடையில் இவ்வாறான சிறியளவிலான மோதல்கள் இடம்பெறுகின்றமை புதிய விடயமல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்