கண்டி மாவட்டத்தில் ஊடரங்குச் சட்டம், நாளை காலை வரை அமுல்

🕔 March 5, 2018

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதலை அடுத்து, கண்டி மாவட்டம் முழுவதும் பொலிஸாரின் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணி வரை, இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திகன நகர் பகுதியில் சட்ட விரோமாக ஒன்று கூடி, தாக்குலை மேற்கொண்டு வருவோர் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும், வீடுகளும் எரிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்