புதிய உள்ளுராட்சி உறுப்பினர்களின் விபரம், 09ஆம் திகதி வெளியிடப்படும்: மஹிந்த தேசபிரிய

🕔 March 4, 2018
ள்ளூராட்சி சபைகளினுடைய புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.

இதற்காக, கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு, அவை பெற்றுக் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையினை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதனடிப்படையில் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமக்கான  உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான இறுதிநாள் கடந்த வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, இந்தத் கால எல்லை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தினம் மேலும் நீடிக்கப்படாது என்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய மேலும் தெரிவத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்