அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோரின் விளக்க மறியல் நீடிப்பு

🕔 March 2, 2018

பெபேசுவல் டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இம்மாதம் 15ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மளியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் மேற்படி இருவரும் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினார்.

பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேற்படி இருவரையும், பெப்ரவரி 04ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

மேற்படி இருவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்