பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

🕔 March 1, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்,  06 பேரைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் பயணமானார்.

அங்கு நடைபெறவுள்ள இலங்கை முலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே, பிரதமர் சிங்கப்பூர் செல்கிறார்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை சந்தை, இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதமர் முக்கிய உரையொன்றினை ஆற்றுவார் என, அவரின் அலுவலம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்திருந்தது.

கடந்த காலங்களில் இதே போன்ற மாநாடுகளை அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, ஐக்கிய அரபு ராஜியம், இந்தியா, சுவிசலாந்து மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை சந்தை நடத்தியுள்ளது.

பிரதமரின் இந்த பயணத்தின் போது, சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் எஸ். ஐஸ்வரனையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்