நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம்

🕔 February 18, 2018

– க. கிஷாந்தன் –

லி
ந்துலை பெயார்வெல் பகுதியில்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில், அதில் பயணம் செய்த  இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார்,  வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்திலுள்ள – மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், கம்பஹா பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பியூமிசாந்த் பிரசாதி பெரேரா எனும் யுவதியாவார். இதில் உயிரிழந்த இளைஞர்  தொடர்பில் இதுவரை தகவல்கள் அறியப்படவில்லை.

நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் இளைஞரும், யுவதியுமே பயணித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேதை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments