நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

🕔 February 17, 2018

டந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும், நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை , உறுப்பினர்களின் பதவிக் காலம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் வரைவில், அவர்கள் தங்கள் பதவிகளை ஆரம்பிக்க முடியாது என்றும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்