பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

🕔 February 16, 2018

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

‘இலங்கையின் பொறுப்புணர்வற்ற அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, மக்களையும் சர்வதேச சமூகத்தையும் மீண்டுமொரு தடவை, தவறாக வழி நடத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் கூறவில்லை.

மக்கள் தெளிவான ஒரு தீப்பை வழங்கியுள்ளனர். அரசாங்கம் மாற வேண்டும். உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ எனவும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்