பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

🕔 February 8, 2018

ங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்ததுள்ளது.

பங்களாதேஷ் பிரதமராக காலிதா ஸியா, இரண்டு தடவை பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.

காலிதா பிரதமராக இருந்தபோது 2001- 2006 காலகட்டத்தில், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், காலிதாவின்ஆதரவற்றோர் நம்பிக்கை நிதியம், அவருடைய பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், குறித்த நம்பிக்கை நிதியத்துக்கு சட்டவிரோதமாக 2,52,000 டொலர் கிடைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காலிதாவின் மகனுக்கும், மேலும் 05 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலிதாவின் ஆதரவற்றோர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஸியா கருணை நம்பிக்கை நிதியம் மூலமாக பாரிய அளவிலான நிதி கையாடல் செய்யப்பட்டதாக, பங்களாதேஷ் ஊழல் தடுப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலிதாவுககு 05 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காலிதா ஸியா – பங்களாதேஷ் தேசியவாத கட்சித் தலைவராகப் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்