கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

🕔 February 2, 2018

கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை (உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர், தனது தந்தை பிடல் கெஸ்ரோவின் முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தமையினால் பிடலிடோ என்று அழைக்கப்பட்டார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் கல்வி கற்ற – அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட்,  கியூப மாநில சபையின் அறிவியல் ஆலோசகராகவும்,  கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலார்ட்,  இதற்காக பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார். ஆனாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக, விரக்தி அடைந்த அவர் – இன்று (உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்துகொண்டார் என்று, கியூப அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி அந்த நாட்டுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ, 2016-ம் ஆண்டு தனது 90 வயதில் மரணம் அடைந்தார்.

அவர் மறைந்து இரண்டு வருடங்களுக்குள், அவருடை மகன் தற்கொலை செய்தமை கியூபா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்