செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

🕔 January 25, 2018

– அஹமட் –

ல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ரஹ்மத் கூறினார்.

மேற்படி வாகனத்தை அதன் உரிமையாளரான தனது நண்பர் எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்ததாகவும் ரஹ்மத் மன்சூர் உறுதிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட வாகனம் 01 கோடி 40 லட்சம் ரூபாய் பெறுமதியுடைது எனவும் ரஹ்மத் மன்சூர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.

இது தொடர்பாக, முன்னர் நாம் வழங்கிய செய்தியில், குறித்த வாகனம் ரஹ்மத் மன்சூருக்கு சொந்தமானது எனத் தெரிவித்திருந்தோம்.

தொடர்பான செய்தி: மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்