தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

🕔 January 22, 2018

– புதிது ஆசிரியர் பீடம் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், தனக்கிருந்த தொடர்புகள் பற்றி, குமாரி கூரே 14 ஆண்டுகளுக்கு முன்னர் ரகசியமானதொரு நேர்காணலை வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணல் இதுவரையில் எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகியிருக்கவில்லை.

ஆனாலும், அதன் சிறு பகுதிகள் சிலவற்றினை ‘புதிது’ செய்தித்தளம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

  • மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் குமாரிக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது.
  • எப்போது அவர்கள் முதன் முதலாக சந்தித்தார்கள்.
  • குமாரி எனும் பெண்ணுக்காக மு.கா. தலைவர் எதையெல்லாம் செய்வதாக உறுதியளித்தார்.
  • குமாரி மீதிருந்த காமத்தின் காரணமாக, முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் எவற்றினையெல்லாம் மு.கா. தலைவர் ஹக்கீம் புறக்கணித்தார்.
  • மு.காங்கிரஸ் தலைவரால் குமாரியின் குடும்பம் எவ்வாறு சிதைந்தது.
  • காமம் – மு.கா. தலைவரின் தலைக்கேறிய போதெல்லாம் அவர் எவ்வாறு நடந்து கொண்டார்.
  •  குமாரிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான உறவினை அறிந்தவர்கள் வேறு யாரெல்லாம் உள்ளனர்.

என்பவை போன்ற ஏராளமான விடயங்களை அக்குவேர், ஆணி வேராக, அந்த நேர்காணலில் குமாரி விபரிக்கின்றார்.

சுமார் 40 நிமிடங்கள் ஓடும், அந்த வீடியோ நேர்காணல், கடந்த சனிக்கிழமை ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது, அகன்ற திரைகளில் காண்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த நேர்காணலை ‘புதிது’ வாசகர்கள் காணும் வகையில் சிறந்த ஒலி, ஒளி தரத்துடன் இங்கு வழங்குகின்றோம்.

இந்த முழுமையான நேர்காணலையும், ‘புதிது’ செய்தித்தளம்தான் முதலில் வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments