அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு

🕔 August 17, 2015

Postal votes - 01நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளன. காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்த நிலையில், அநேகமான மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்த நிலையிலேயே காணப்பட்டன.

இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல் தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் அமைதியான முறையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றமையே அதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது மாவட்ட ரீதியாக வாக்களிப்பு வீதம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி;

இலக்கம் மாவட்டம் வீதம்
01 அம்பாறை 65%
02 மாத்தளை 65%
03 கம்பஹா 70%-78%
04 வவுனியா 61%
05 காலி 70%
06 அனுராதபுரம் 65%-70%
07 பதுள்ளை 65%-70%
08 ரத்தினபுரி 72%
09 கேகாலை 70%
10 மாதறை 70%
11 முல்லைத்தீவு 71%
12 யாழ்ப்பாணம் 60%
13 திருகோணமலை 75%
14 குருணாகல் 65%
15 ஹம்பாந்தோட்டை 70%

Comments

புதிது பேஸ்புக் பக்கம்